ஜனாதிபதியின் ஆட்சி 10 வருடங்கள் தொடரும்

இ.தொ.கா ரமேஸ்வரன் உறுதி

மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்பினையும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொடுத்தது மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம்.

அதேபோன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சதான் இந்த நாட்டின் 10 வருடத்திற்கு ஜனாதிபதி. அந்த அரசாங்கத்தின் ஒரே பங்காளி கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

அதனூடாக மலையகத்தின் பாரிய தொழில் வாய்ப்புக்களையும் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இ.தொ. கா. வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டம் நேற்று  ஹட்டன் டி.கே.டப்ளியூ மண்டபத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வந்து ஆதரவளிப்பது மட்டு அல்லாது ஆசிர்வாதத்தினையும் செலுத்தி சென்றுள்ளனர். 

இன்றும் அவ்வாறே தான். ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு பெரும் சக்தியாக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வுக்கு இ.தொ. கா.வின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான், கணபதி கணகராஜ், பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உட்பட இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 


Add new comment

Or log in with...