வெளிநாடுகளில் கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு காப்புறுதி | தினகரன்


வெளிநாடுகளில் கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு காப்புறுதி

இதுவரை 35 இலங்கை தொழிலாளர்கள் இறந்தமை உறுதி

 

கொரோனா தொற்றினால்  வெளிநாடுகளில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கான காப்புறுதி கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் வௌிநாடுகளில் இதுவரை 35 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் வனிகசேகர தெரிவித்துள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா 6 இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். வௌிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்களின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 10 பேரின் மரண சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...