ராஜாங்கனையில் 13, 500 பேர் தனிமைப்படுத்தலுக்கு

ராஜாங்கனை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுவரும் நிலையில் நேற்று 15 வரை ஒன்பது கிராம சேவை அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்த 13,500 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பிரதேசத்தில் இருந்து வேறு பிரதேசங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதேசத்தில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. 

அங்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச தொற்றுநோய் விசேட நிபுணர் டாக்டர் தேஜன சோமதிலக தெரிவிக்கையில்;  

நேற்றுவரை 675 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 208 குடும்பங்களைச் சேர்ந்த 1016 பேரிடம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதில் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.  

சினிமாபுர சந்தியிலிருந்து பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மற்றும் விசேட

செயலணியினருடன் இராணுவத்தினரும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ஸ)


Add new comment

Or log in with...