அறிவையும் திறனையும் பிணையாக வைத்து கடன்பெறும் புதிய முறை

சலுகை வட்டி வீதத்தில் அறிவையும் திறமையையும் பிணையாக வைத்து நிதி வசதியை மக்களுக்கு பெற்றுக்கொடுத்து அவர்களை கடனிலிருந்து மீட்க அரசு தலையிடவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

அண்மையில் கெஸ்பாவ தேர்தல் தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,..  

ஒரு நாடானது 25%, 28% வட்டி வீத்தில் கடன் வாங்கி அந்த 25% கடன் வட்டியை செலுத்தினால் நாலு வருடத்தில் பெற்ற பணத்தின் பெறுமான அளவுக்கு வட்டியாக செலுத்த வேண்டி நேரிடும். ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் கடன் வழங்கும் போது வட்டி வீதம் 5%, 2%, 6% ஆகும் வைப்புகளுக்கு வட்டி வழங்கப்படுவதில்லை. சுவிட்ஸர்லாந்தில் வட்டி விதம் 1 ஆகும்.

100 ரூபாவை வங்கி கணக்கு புத்தகத்தில் இட்டால் 99 ரூபாவே கிடைக்கும்.

வட்டி குறைந்தால் உற்பத்தி செலவு குறையும். பொருட்களின் விலை குறையும். வாழ்க்கைச் செலவு குறைவடையும்.

கைத்தொழிற் துறைகள் வளர்ச்சியடையும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் தனி இலக்கத்தில் கடனை பெறக்கூடிய நாடாக அடுத்த வருடம் மாற்றியமைக்க கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...