பரீட்சை சான்றிதழ் கருமபீடங்கள் தற்காலிக மூடல் | தினகரன்

பரீட்சை சான்றிதழ் கருமபீடங்கள் தற்காலிக மூடல்

சுகாதாரக் காரணங்களைக் கருதி இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரு நாள் மற்றும் வழமையான சேவை கருமபீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (15) முதல், குறித்த கருமபீடங்கள் தற்காலிகமாக மூடப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பதாரிகள், இணையவழி (online) ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ விண்ணப்பித்து, 48 மணி நேரத்திற்குள் சான்றிதழ்களை வீட்டிற்கே வரவழைப்பதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

மேலதிக விபரங்களுக்காக பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk பார்வையிடுவதன் ஊடாகவோ அல்லது, 0112784323 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சான்றிதழ் பிரிவை அழைப்பதன் ஊடாகவோ அல்லது, உடனடித் தொலைபேசி இலக்கமான 1911 தொடர்புகொள்வதன் ஊடாகவோ தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.


Add new comment

Or log in with...