ரஷித் கான் திருமணம் எப்போது | தினகரன்

ரஷித் கான் திருமணம் எப்போது

ஆப்கானிஸ்தான் அணி உலக கிண்ணத்தை வென்றால் தான் எனது திருமணம் நடக்கும்  என ரஷித் கான் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீரர்  ரஷித் கான் 21. நவீன கிரிக்கெட் உலகில் சிறந்த சகலதுறை வீரர். ஐ.சி.சி.,டுவென்டி தரவரிசையில் முதனிலை பந்துவீச்சாளராக  உள்ளார். 67 ஒருநாள், 48 ரி  20 போட்டிகளில் 200க்கும் மேல் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக அயர்லாந்துக்கு எதிரான ரி டுவென்டி தொடரில் மூன்று போட்டியில் 5 விக்கெட் சாய்த்தார். ஐ.பி.எல்., தொடரில்  ஹைதராபாத்  அணிக்காக விளையாடுகிறார். தனது திருமணம் குறித்து ரஷித் கான் கூறுகையில்,உலக கோப்பை கிரிக்கெட்டில் எங்களது ஆப்கானிஸ்தான் அணி சம்பியன் ஆக  வேண்டும். பிறகு தான் நிச்சயதார்த்தம், திருமணம் செய்து கொள்வேன், என்றார்.

இது நடக்குமா

சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் அணி ஆப்கானிஸ். கடந்த 2015, 2019 என இரு உலக கிண்ண தொடரில் தான் ஆப்கானிஸ்தான்  பங்கேற்றது. இதில் பங்கேற்ற 15 போட்டியில் 1ல் தான் வென்றது. 14ல் தோற்றது. இந்த அணி உலக கோப்பை வென்றால் தான்  திருமணம் என ரஷித் கான் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.


Add new comment

Or log in with...