கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களை மீட்குமாறு வைகோ கோரிக்கை | தினகரன்

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களை மீட்குமாறு வைகோ கோரிக்கை

கிர்கிஸ்தான் மருத்துவ மாணவர்களையும்  ஈரான் மீனவர்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வைகோ திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “ தமிழ்நாட்டைச் சேர்ந்த 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள்,  கிர்கிஸ்தான் நாட்டில்,  மருத்துவக் கல்வி பயின்று வருகின்றார்கள்.  கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாடு திரும்புவதற்காக  இந்தியத் தூதரகத்தில் தொடர்ந்து விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் தமிழ்நாட்டுக்கு இரண்டு வான் ஊர்திகள் ஏற்பாடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்,  324 மாணவர்கள் திருச்சி வந்துள்ளதாகவும், எஞ்சியவர்களையும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 720 மீனவர்களையும் மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


Add new comment

Or log in with...