உணவட்டுன உப புகையிரத நிலையம் தற்காலிக மூடல் | தினகரன்

உணவட்டுன உப புகையிரத நிலையம் தற்காலிக மூடல்

- கொரோனா தொற்றாளருடன் நிலைய அதிபருக்கு தொடர்பு

உணவட்டுன உப புகையிரத நிலையத்தை இன்று (13) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு, புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையம்) ஹபராதுவ பிரதேசத்திற்கு வந்த ஒருவருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. குறித்த நபர், உணவட்டுன உப புகையிரத நிலைய அதிபருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதன் காரணமாக, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த உப புகையிரத நிலைய அதிபர், PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...