கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேர் அடையாளம்: 2,350 | தினகரன்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேர் அடையாளம்: 2,350

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேர் அடையாளம்: 2,350-196 More COVID19 Cases Identified-Welikada Rehabilitazation Centre-Total Cases in Sri Lanka-2,350

- பணிபுரியும் பெண் உள்ளிட்ட 253 பேர் இதுவரை அடையாளம்
- வருகை தந்த 119 பேர் தொடர்பில் கவனம்
- 2,078 ஆக அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் பின் மற்றுமொரு அலை
- இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 2350

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பணியாளர்கள் மற்றும் புனர்வாழ்வு பெறுவோருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை முடிவுகளின் அடிப்படையில் குறித்த 196 பேரும் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இதுவரை அங்கு மாத்திரம் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (09) அங்கு 56 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த புனர்வாழ்வு மையத்தில் ஆலோசக விரிவுரையாளராக பணியாற்றும் மாரவிலவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அங்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இதுவரை 253 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அதற்கமைய, அங்கு தொடர்ந்தும் PCR பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் அங்கு புனர்வாழ்வு பெற்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் கண்டு, இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய PCR சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் யாவும், சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினரினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சமூகத்தில் கொவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்ப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், புனர்வாழ்வு பெற்றவர்களை, குறித்த காலப் பகுதியில் பார்வையிட வந்த 119 பேரை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுமுறையிலுள்ள, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கடமையாற்றும் மேலும் 08 ஆலோசகர்களுக்கு மீண்டும் குறித்த மையத்திற்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்று ஹெந்தளைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மேலும் 50 பேரை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு மையத்தில் ஆலோசக விரிவுரையாளராக பணியாற்றும் மாரவிலவைச் சேர்ந்த குறித்த பெண் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை (07) வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்தில் (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையம், கந்தக்காடு) கடந்த 3 மாதங்களாக புனர்வாழ்வளிக்கப்பட்டு, கடந்த ஜூன் 27ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருந்தார்.

குறித்த நபர், இலங்கையில் கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 2,078 ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜா-எலவில் இலங்கையின் 206ஆவது தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட  போதைக்கு அடிமையானவர் காரணமாக ஏற்பட்ட தொற்றினால் 905 கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோர் உள்ளிட்ட 949 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படக் காரணமாக அமைந்நதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- தற்போது சிகிச்சையில் 360 பேர்
- குணமடைந்தோர் 1979

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 196 பேர் இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்திலிருந்த 196 பேரே இன்று இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

இன்று (10) முற்பகல் 7.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,154 இலிருந்து 2,350 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (09) கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்திலிருந்த 56 பேர் மற்றும் அதில் ஆலோசக விரிவுரையாளராக பணியாற்றும் மாரவிலவைச் சேர்ந்த பெண் ஒருவர், கட்டாரிலிருந்து வந்த ஒருவர், கடற்படையைச் சேர்ந்த ஒருவர், பங்களாதேஷிலிருந்து வந்த ஒருவர் ஆகிய 60 பேரே அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைன, இன்றையதினம் (10) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 196 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அடையாளம் - 2,350
குணமடைவு - 1,979

இன்று அடையாளம் - 196
இன்று குணமடைவு - 00
சிகிச்சையில் - 360
மரணம் - 11

Image may contain: text100%
மரணமடைந்தவர்கள் - 11
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 1,979
ஜூலை 09 - 12 பேர் (1,979)
ஜூலை 08 - 12 பேர் (1,967)
ஜூலை 07 - 38 பேர் (1,955)
ஜூலை 06 - 14 பேர் (1,917)
ஜூலை 05 - 18 பேர் (1,903)
ஜூலை 04 - 22 பேர் (1,885)
ஜூலை 03 - 36 பேர் (1,863)
ஜூலை 02 - 79 பேர் (1,827)
ஜூலை 01 - 37 பேர் (1,748)
ஜூன் 30 - 33 பேர் (1,711)
ஜூன் 29 - 17 பேர் (1,678)
ஜூன் 28 - 22 பேர் (1,661)
ஜூன் 27 - 20 பேர் (1,639)
ஜூன் 26 - 17 பேர் (1,619)
ஜூன் 25 - 40 பேர் (1,602)
ஜூன் 24 - 14 பேர் (1,562)
 ஜூன் 23 - 22 பேர் (1,548) 
ஜூன் 22 - 28 பேர் (1,526)
ஜூன் 21 - 26 பேர் (1,498)
ஜூன் 20 - 26 பேர் (1,472)
ஜூன் 19 - 25 பேர் (1,446)
ஜூன் 18 - 24 பேர் (1,421)
ஜூன் 17 - 26 பேர் (1,397)
ஜூன் 16 - 29 பேர் (1,371)
ஜூன் 15 - 55 பேர் (1,342)
ஜூன் 14 - 35 பேர் (1,287)
ஜூன் 13 - 56 பேர் (1,252)
ஜூன் 12 - 46 பேர் (1,196)
ஜூன் 11 - 28 பேர் (1,150)
ஜூன் 10 - 65 பேர் (1,122)
ஜூன் 09 - 67 பேர் (1,057)
ஜூன் 08 - 49 பேர் (990)
ஜூன் 07 - 50 பேர் (941)
ஜூன் 06 - 33 பேர் (891)
ஜூன் 05 - 19 பேர் (858)
ஜூன் 04 - 03 பேர் (839)
ஜூன் 03 - 13 பேர் (836)
ஜூன் 02 - 12 பேர் (823)
ஜூன் 01 - 10 பேர் (811)
மே 31 - 20 பேர் (801)
மே 30 - 27 பேர் (781)
மே 29 - 09 பேர் (754)
மே 28 - 13 பேர் (745)
மே 27 - 20 பேர் (732)
மே 26 - 17 பேர் (712)
மே 25 - 21 பேர் (695)
மே 24 - 14 பேர் (674)
மே 23 - 40 பேர் (660)
மே 22 - 16 பேர் (620)
மே 21 - 20 பேர் (604)
மே 20 - 35 பேர் (584)
மே 19 - 10 பேர் (569)
மே 18 - 21 பேர் (559)
மே 17 - 18 பேர் (538)
மே 16 - 43 பேர் (520)
மே 15 - 32 பேர் (477)
மே 14 - 63 பேர் (445)
மே 13 - 16 பேர் (382)
மே 12 - 23 பேர் (366)
மே 11 - 22 பேர் (343)
மே 10 - 61 பேர் (321)
மே 09 - 20 பேர் (260)
மே 08 - 08 பேர் (240)
மே 07 - 17 பேர் (232)
மே 06 - 02 பேர் (215)
மே 05 - 19 பேர் (213)
மே 04 - 10 பேர் (194)
மே 03 - 12 பேர் (184)
மே 02 - 10 பேர் (172)
மே 01 - 08 பேர் (162)
ஏப்ரல் 30 - 18 பேர் (154)
ஏப்ரல் 29 - 02 பேர் (136)
ஏப்ரல் 28 - 08 பேர் (134)
ஏப்ரல் 27 - 06 பேர் (126)
ஏப்ரல் 26 - 02 பேர் (120)
ஏப்ரல் 25 - 09 பேர் (118)
ஏப்ரல் 24 - 02 பேர் (109)
ஏப்ரல் 23 - 02 பேர் (107)
ஏப்ரல் 22 - 03 பேர் (105)
ஏப்ரல் 21 - 04 பேர் (102)
ஏப்ரல் 20 - 02 பேர் (98)
ஏப்ரல் 19 - 10 பேர் (96)
ஏப்ரல் 18 - 09 பேர் (86)
ஏப்ரல் 17 - 09 பேர் (77)
ஏப்ரல் 16 - 05 பேர் (68)
ஏப்ரல் 15 - 02 பேர் (63)
ஏப்ரல் 14 - 05 பேர் (61)
ஏப்ரல் 13 - 00 பேர் (56)
ஏப்ரல் 12 - 02 பேர் (56)
ஏப்ரல் 11 - 00 பேர் (54)
ஏப்ரல் 10 - 05 பேர் (54)
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 02 - 00 பேர் (21)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 24 - 00 பேர் (02)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 2,350
ஜூலை 10 - 196 பேர் (2,350)
ஜூலை 09 - 60 பேர் (2,154)
ஜூலை 08 - 13 பேர் (2,094)
ஜூலை 07 - 04 பேர் (2,081)
ஜூலை 06 - ஒருவர் (2,077)
ஜூலை 05 - 02 பேர் (2,076)
ஜூலை 04 - 05 பேர் (2,074)
ஜூலை 03 - 03 பேர் (2,069)
ஜூலை 02 - 12 பேர் (2,066)
ஜூலை 01 - 07 பேர் (2,054)
ஜூன் 30 - 05 பேர் (2,047)
ஜூன் 29 - 05 பேர் (2,042)
ஜூன் 28 - 04 பேர் (2,037)
ஜூன் 27 - 19 பேர் (2,033)
ஜூன் 26 - 04 பேர் (2,014)
ஜூன் 25 - 09 பேர் (2,010)
ஜூன் 24 - 10 பேர் (2,001)
ஜூன் 23 - 40 பேர் (1,991)
ஜூன் 22 - 01 பேர் (1,951)
ஜூன் 21 - 00 பேர் (1,950)
ஜூன் 20 - 00 பேர் (1,950)
ஜூன் 19 - 03 பேர் (1,950)
ஜூன் 18 - 23 பேர் (1,947)
ஜூன் 17 - 09 பேர் (1,924)
ஜூன் 16 - 10 பேர் (1,915)
ஜூன் 15 - 16 பேர் (1,905)
ஜூன் 14 - 05 பேர் (1,889)
ஜூன் 13 - 04 பேர் (1,884)
ஜூன் 12 - 03 பேர் (1,880)
ஜூன் 11 - 08 பேர் (1,877)
ஜூன் 10 - 10 பேர் (1,869)
ஜூன் 09 - 02 பேர் (1,859)
ஜூன் 08 - 22 பேர் (1,857)
ஜூன் 07 - 21 பேர் (1,835)
ஜூன் 06 - 13 பேர் (1,814)
ஜூன் 05 - 04 பேர் (1,801)
ஜூன் 04 - 48 பேர் (1,797)
ஜூன் 03 - 66 பேர் (1,749)
ஜூன் 02 - 40 பேர் (1,683)
ஜூன் 01 - 10 பேர் (1,643)
மே 31 - 13 பேர் (1,633)
மே 30 - 62 பேர் (1,620)
மே 29 - 28 பேர் (1,558)
மே 28 - 61 பேர் (1,530)
மே 27 - 150 பேர் (1,469)
மே 26 - 137 பேர் (1,319)
மே 25 - 41 பேர் (1,182)
மே 24 - 52 பேர் (1,141)
மே 23 - 21 பேர் (1,089)
மே 22 - 13 பேர் (1,068)
மே 21 - 27 பேர் (1,055)
மே 20 - ஒருவர் (1,028)
மே 19 - 35 பேர் (1,027)
மே 18 - 11 பேர் (992)
மே 17 - 21 பேர் (981)
மே 16 - 25 பேர் (960)
மே 15 - 10 பேர் (935)
மே 14 - 10 பேர் (925)
மே 13 - 26 பேர் (915)
மே 12 - 20 பேர் (889)
மே 11 - 06 பேர் (869)
மே 10 - 16 பேர் (863)
மே 09 - 12 பேர் (847)
மே 08 - 11 பேர் (835)
மே 07 - 27 பேர் (824)
மே 06 - 29 பேர் (797)
மே 05 - 16 பேர் (768)
மே 04 - 37 பேர் (755)
மே 03 - 13 பேர் (718)
மே 02 - 15 பேர் (705)
மே 01 - 25 பேர் (690)
ஏப்ரல் 30 - 16 பேர் (665)
ஏப்ரல் 29 - 30 பேர் (649)
ஏப்ரல் 28 - 31 பேர் (619)
ஏப்ரல் 27 - 65 பேர் (588)
ஏப்ரல் 26 - 63 பேர் (523)
ஏப்ரல் 25 - 40 பேர் (460)
ஏப்ரல் 24 - 52 பேர் (420)
ஏப்ரல் 23 - 38 பேர் (368)
ஏப்ரல் 22 - 20 பேர் (330)
ஏப்ரல் 21 - 06 பேர் (310)
ஏப்ரல் 20 - 33 பேர் (304)
ஏப்ரல் 19 - 17 பேர் (271)
ஏப்ரல் 18 - 10 பேர் (254)
ஏப்ரல் 17 - 06 பேர் (244)
ஏப்ரல் 16 - 00 பேர் (238)
ஏப்ரல் 15 - 05 பேர் (238)
ஏப்ரல் 14 - 15 பேர் (233)
ஏப்ரல் 13 - 08 பேர் (218)
ஏப்ரல் 12 - 11 பேர் (210)
ஏப்ரல் 11 - 02 பேர் (199)
ஏப்ரல் 10 - 07 பேர் (197)
ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 06 பேர் (186)
ஏப்ரல் 06 - 04 பேர் (180)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 02 பேர் (122)
மார்ச் 29 - 05 பேர் (120)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்


Add new comment

Or log in with...