ரிஷாட் பதியுதீனிடம் சுமார் 10 மணி நேர வாக்குமூலம்

ரிஷாட் பதியுதீனிடம் சுமார் 10 மணி நேர வாக்குமூலம்-Easter Sunday Attack-Nearly 10 Hr Statement From Rishad Bathiudeen-Pujith Jayasundara-Hemasiri Fernando at PCoI

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெனாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 10 மணி நேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் இன்று (09) முற்பகல் 10 மணியளவில் அங்கு முன்னிலையான நிலையில் இரவு 8.00 மணியளவில் அங்கிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோர், இன்று (09) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியிருந்தனர்.

இன்று முற்பகல் அவர்கள், அங்கு முன்னிலையாகியிருந்த நிலையில் பூஜித் ஜயசுந்தர சுமார் 9 மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஹேமசிறி பெனாண்டோ அதன் பின்னர் அங்கிருந்து வௌியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...