கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வந்த வெலிக்கடை கைதிக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனை அறிவித்துள்ளார்.

குறித்த கைதி, கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்திலிருந்தவர் (சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வு நிலையம், கந்தக்காடு) எனவும், அவரை கடந்த ஜூன் 27ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் என குறித்த நபர் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புபட்டவர்கள் அனைவருக்கும் தற்போது PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விளக்கமறியல் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...