பல்கலை விரிவுரையாளர்களுக்கு காணி உறுதியுடன் வீடமைப்புத் திட்டம்

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரத்துடன் கூடியதாக மாடி வீட்டுத் திட்டமொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. களனி, கொழும்பு, ஜயவர்தனபுர, மொரட்டுவ மற்றும் அழகியற்கலை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வீடுகளின்றி பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபை செயலாளர் அடங்கிய குழு ஆராய்ந்துள்ளது. 

ஒறுகொடவத்தை பிரதேச வீதிக் கட்டமைப்பு பாரியளவில் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில் தவணை அடிப்படையில் செலுத்தி பெறும் வகையில் மாடி வீட்டுத் திட்டமொன்றை நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் விரிவுரையாளர்களின் பிரச்சினை தொடர்பில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் தனக்கு அறிவித்ததாக உயர்கல்வி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 

கொரோனா தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அரசாங்கம் பல்வேறு சலுகைகளையும் நிவாரணங்களையும் மக்களுக்கு வழங்கியது. சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. 30 இலட்சம் ரூபா வரையான வருமானம், வருமான வரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.வரலாற்றில் கூடுதலான வரிச்சலுகை இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். (பா)  


Add new comment

Or log in with...