கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளிவிட்ட ஆயுதப் போராட்டம்

மாற்றுவதே எனது பொறுப்பென்கிறார் அமைச்சர் டக்ளஸ்

கையேந்தி வாழுகின்ற நிலையையே ஆயுதப் போராட்டம் எமது  மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருப்பதாக கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த வாழ்வியல் முறையை  மாற்றுவதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார். யாழ்.செம்பியன்பற்று தெற்கு பிரதேச மக்களினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல்  மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தரப்புக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம்  தவறான வழிநடத்தல் காரணமாக எமது மக்களிடம் இருந்ததையும் அழித்திருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பப் போராளி என்ற வகையில்  ஏற்பட்ட அழிவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மக்களின் அழிந்த வாழ்வியலை உருவாக்குதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனத்  தெரிவித்தார்.

அத்துடன், பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். இதன்போது, பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி,  விவசாய நடவடிக்கைகளுக்கான சேதன மற்றும் அசேதன  பசளைகளை மானிய அடிப்படையில் பெற்றுக் கொள்ளல், குரங்குகளின் தொல்கைளுக்கு தீர்வு காணுதல் உட்பட பல்வேறு  விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...