பஹ்ரைனிலிருந்து 290 பேர், மாலைதீவிலிருந்து 120 பேர் வருகை | தினகரன்

பஹ்ரைனிலிருந்து 290 பேர், மாலைதீவிலிருந்து 120 பேர் வருகை

- கட்டாரிலிருந்து 17 பேர் நேற்று வருகை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், பஹ்ரைன் மற்றும் மாலைதீவு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 410 பேர் இன்று (05) நாடு திரும்பியுள்ளனர்.

பஹ்ரைனிலிருந்து இலங்கையர்கள் 290 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம், இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவ்விமானத்தில் வருகை தந்தோரில் அதிகளவானோர், அந்நாட்டில் வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்தவர்களாவர்.

அத்தோடு, மாலைதீவிலிருந்து 120 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவர்கள் மாலைதீவிலுள்ள சுற்றுலா ஹோட்டல்களில் பணியாற்றியோராவர்.

இதேவேளை, கட்டாரிலிருந்து இலங்கையர்கள் 17 பேர் நேற்றிரவு (04)  இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும், விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...