விஜயகலா மீதான வழக்கு நவ-27 வரை ஒத்திவைப்பு | தினகரன்

விஜயகலா மீதான வழக்கு நவ-27 வரை ஒத்திவைப்பு

புலிகள் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து;

விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டமையால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழங்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 27 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் புதுக்கடை நீதிமன்றத்தில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சட்டத்தரணி தவராஜாவுடன் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கினை விசாரணை செய்த கொழும்பு புதுக்கடை நீதவான் எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்தார்.


Add new comment

Or log in with...