முதலை கடித்து காணாமல் போன பொலிசாரின் சடலம் மீட்பு

நில்வளா கங்கையில் காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியொன்று நில்வளா கங்கையில் வீழ்ந்ததை தொடர்ந்து, அதை எடுக்க முயற்சித்தபோது, அவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நில்வளா கங்கையின் மாகல்லகொட நீர் பம்பும் பகுதிக்கு அருகில்இச்சம்பவம் நேற்று முன்தினம் (01) இடம்பெற்றுள்ளது.

அவ்விடத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின்போது, அவரது நண்பரின் தொலைபேசி கங்கையில் வீழ்ந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நண்பரை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் அந்த இடத்திற்கு பொலிஸ் ஊழியர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கங்கையில் வீழ்ந்த குறித்த கையடக்க தொலைபேசியில் வெளிச்சம் வீசுவதை அவதானித்த அவர், கங்கையில் இறங்கி, கையடக்க தொலைபேசியை மீட்டு, கரையிலிருந்த மற்றுமொரு நண்பரிடம் கொடுத்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஆற்றில் வீழ்ந்த நிலையில், அவர் கங்கையிலிருந்து கரைக்கு வெளியேற முற்பட்டபோது வழுக்கியதில் முதலையொன்று அவரை பிடித்து இழுத்துள்ளது.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து, அவர் ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து 300 மீற்றர் தொலைவில் அவரது சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.

54 வயதுடைய 04  பிள்ளைகளின் தந்தையான,  கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்த ஒருவரே குறித்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...