ரூ. 2 கோடி மதிப்பு; பருத்தித்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ரூ. 2 கோடி மதிப்பு; பருத்தித்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது-2kg ICE-201kg Cannabis Seized-2 Suspects Arrested-Point Pedro-Valvettithurai-Jaffna

- லொறிக்குள் சூட்சுமமாக 201 கிலோகிராம் கஞ்சா; பருத்தித்துறை நபர் கைது

இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் போதை பொருளை வாகனத்தில் கடத்தி சென்ற நபரை பொலிஸ் அதிரடி படையினர் கைது செய்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வல்வெட்டித்துறை, குச்சன் ஒழுங்கையைச் சேர்ந்த 66 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், வல்வெட்டித்துறை பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதிக்கு ஹயஸ் ரக வேன் ஒன்றில் ஐஸ் போதை பொருளை கடத்தி செல்வதாக பொலிஸ் அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வாகனத்தை மடக்கிய அதிரடிப் படையினர், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

ரூ. 2 கோடி மதிப்பு; பருத்தித்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது-2kg ICE-201kg Cannabis Seized-2 Suspects Arrested-Point Pedro-Valvettithurai-Jaffna

குறித்த போதைப்பொருள் இரு பொதிகளாக பொதி செய்யப்பட்ட நிலையில், சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளடன் , மீட்கப்பட்ட போதைப் பொருளையும், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக விசாரணைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர் இனறையதினம் (02) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

லொறிக்குள் சூட்சுமமாக 201 கிலோகிராம் கஞ்சா; பருத்தித்துறை நபர் கைது

வவுனியா, பறையன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகாடு பகுதியில் ரூபா 2 கோடி பெறுமதியான 201 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (01) காலை 7.10 மணியளவில் மதவாச்சி - மன்னார் வீதியில் வைத்து குறித்த கஞ்சா தொகுதியை மீட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், லொறியொன்றிற்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

லொறியின் உடலானது அலுமினியம் தகட்டினால் மூடப்பட்டு, அதன் உட்பகுதியில் உள்ள எஞ்சிய உடல் பகுதியில் திறக்கப்படக்கூடிய மூடியொன்றினால், திருகாணியினால் இறுக்கப்பட்ட இரகசிய கூடமொன்றினுள், 4 கோணிகளில் வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 87 பொதிகளில் குறித்த கஞ்சா தொகுதியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர், 22 வயதான, பருத்தித்துறை, புலோலி வடக்கு, ஊரியவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மதவாச்சிக்கு பயணித்த சிறிய ரக லொறி ஒன்றிலேயே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்றையதினம் (02) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...