அரசில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வேண்டும் | தினகரன்

அரசில் முஸ்லிம்களும் பங்காளிகளாக வேண்டும்

2025 வரை கோட்டாபயவே ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 2025வரை   ஆட்சி  செய்யப் போகின்றார்.ஆகையால் பாராளுமன்றத்  தேர்தலில் நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களித்து முஸ்லிம்களாகிய நாமும் இவ் அரசில் ஒரு பங்காளியாக வேண்டும். 2010ல் மூவின மக்களும் இணைந்து மஹிந்த ராஜபக்‌ஷ  தலைமையிலான அரசில் ஒற்றுமையாக வாழ்ந்தோம். முஸ்லிம் தலைவர்கள்தான் முஸ்லிம்களை துாரமாக்கினார்கள்  என பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்தார். தெகிவளையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அலிசப்றி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர்  உரையாற்றுகையில் கூறியதாவது,...

முஸ்லிம்களாகிய நாம் தொடர்ந்தும் பிழையான வழிக்குச் செல்லாது, சிந்தித்து செயல்படல் வேண்டும். 2015இல் ஐக்கிய தேசிய கட்சியின் வலைக்குள் வீழ்ந்து ரிசாட் பதியுத்தீன் மற்றும் ரவூப் ஹக்கீமும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இருந்து விலகி முஸ்லிம்களை துாரமாக்கினார்கள். வட கிழக்கில் வாழும் முஸ்லிகள் இந்த தலைவர்கள் சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறகூடாது. அவர்கள் எமது மக்களை மீண்டுமொரு படுபாதள குழிக்குள் விழவைத்து விடுவார்கள்.

வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை 24மணித்தியாலங்களுக்குள் சொப்பிங் பேக்குடன் அன்று விடுதலைப்புலிகள் துரத்தினார்கள். மகிந்த ராஜபக்‌ஷ  தலைமையிலான அரசு யுத்தத்தினை வென்றெடுத்தது.

முஸ்லிம்களை வேறாக்குவதற்கு பல தீய சக்திகள் திட்டம் தீட்டினார்கள். அதற்குள் நாமும் சிக்கினோம் என்றார்.

அஸ்ரப் ஏ சமத்


Add new comment

Or log in with...