புகையிரதம் – ஆட்டோ விபத்து; ஒருவர் பலி | தினகரன்

புகையிரதம் – ஆட்டோ விபத்து; ஒருவர் பலி

வவுனியா, செட்டிகுளம்  துடரிக்குளம் பகுதியில் இன்று (01) காலை புகையிரத்துடன் முச்சக்கரவண்டி மோதுண்டு  விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துடரிக்குளம் பகுதியில் புகையிரதக் கடவையினை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டியினை, மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

58 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர்)

 


Add new comment

Or log in with...