பகல் நேர பராமரிப்பு நிலையங்கள் ஜூலை 06 முதல் முழுமையாக திறப்பு

பகல் நேர பராமரிப்பு நிலையங்கள் ஜூலை 06 முதல் முழுமையாக திறப்பு-Daycare Centers Reopen 100pcnt by July 06

கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஜூலை 06ஆம் திகதி முதல் முற்று முழுதாக மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை அறிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி இந்த மையங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை, பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களை, சிறுவர்களின் எண்ணிக்கையில் 75% ஆன அளவில் கொண்டு திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், ஜூலை 06 முதல் முற்றாக (100%) சிறுவர்களை உள்ளடக்கியவாறு, பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...