அநுருத்த பாதெனிய 10 ஆவது தடவையாக GMOA தலைவராக தெரிவு

அநுருத்த பாதெனிய 10 ஆவது தடவையாக GMOA தலைவராக தெரிவு-Anuruddha Padeniya Re-Elected as GMOA President

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவராக, வைத்தியர் அநுருத்த பாதெனிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) இடம்பெற்ற அச்சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) போட்டியின்றி தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அநுருத்த பாதெனிய 10 ஆவது தடவையாக GMOA தலைவராக தெரிவு-Anuruddha Padeniya Re-Elected as GMOA President

அவர் போட்டியின்றி தெரிவு செய்யப்படும் 4ஆவது தடவை இதுவாகும் என்பதோடு, 10ஆவது தடவையாக (10 வருடங்களாக) அவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சங்கத்தின் புதிய செயலாளராக வைத்தியர் ஷெனால் பெனாண்டோவும் போட்டியின் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அச்சங்கம் தெரிவித்துள்ளது.

அநுருத்த பாதெனிய 10 ஆவது தடவையாக GMOA தலைவராக தெரிவு-Anuruddha Padeniya Re-Elected as GMOA President

இதற்கு முன்னர் சங்கத்தின் செயலாளராக கடமையாற்றிய வைத்தியர் ஹரித அலுத்கே, அச்சங்கதின் ஊடக ஆசிரியர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய பதவிகளில் மாற்றங்கள் இல்லை.

உப செயலாளர்களாக வைத்தியர் நவீன் டி சொய்ஷா மற்றும் வைத்தியர் சமந்த ஆனந்த ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அநுருத்த பாதெனிய 10 ஆவது தடவையாக GMOA தலைவராக தெரிவு-Anuruddha Padeniya Re-Elected as GMOA President

Add new comment

Or log in with...