ஓமந்தையில் விபத்து; 18 பேர் காயம் | தினகரன்

ஓமந்தையில் விபத்து; 18 பேர் காயம்

வவுனியா, ஓமந்தையில் இன்று(27) அதிகாலை இடம்பெற்ற விபத்தில்18 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் வண்டியொன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியிலிருந்த பாலத்திற்குள் வீழ்ந்துள்ளது.

எதிரில் வந்த லொறியுடனான  விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ்விபத்து ஏற்பட்டதாக, குறித்த பஸ் வண்டியின் நடத்துனர் தெரிவித்தார். 

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(வவுனியாநிருபர்)


Add new comment

Or log in with...