கொவிட்-19; மேலும் 21 கடற்படையினர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 21 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளனர்.

அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, அவர்களது உடலில் குறித்த வைரஸ் தொற்று மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று (24) அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 811ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், அவர்களை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

கொவிட்-19 தொற்றினால் 901 கடற்படையினர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 811 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 90 கடற்படையினர்  சிகிச்சை பெற்று வருவதாக, கடற்படையினர் தெரிவித்தனர். 


Add new comment

Or log in with...