OPPO தொலைபேசிகளுடன் ColorOS அன்ட்ரொய்ட் 10 உத்தியோகபூர்வ பதிப்பு

OPPO தொலைபேசிகளுடன் ColorOS அன்ட்ரொய்ட் 10 உத்தியோகபூர்வ பதிப்பு-OPPO ColorOS Android 10 Launch

புதுப்பிப்பு இரண்டு கட்டங்களில் வெவ்வேறு பதிப்புகளுக்கு வெளியிடப்படவுள்ளது

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் உத்தியோகப்பூர்வ பதிப்பான கலர்ஓஎஸ் 7 இயங்குதளத்தின் (அன்ட்ரொய்ட் 10 அடிப்படையாகக் கொண்டது) மே 28 முதல் இலங்கைக்கு வெளியிடும் திட்டத்தை அறிவித்தது. ஏப்ரல் முதல், OPPO பயனர்கள் கலர்ஓஎஸ் 7 இன் உத்தியோகபூர்வ பதிப்பைப் பெற்று வருகின்றனர், தற்போது அது 20 இற்கும் மேற்பட்ட OPPO ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது. இதில் இறுதியாக Reno, F Series, A Series ஆகிய தொடர்களுக்கு அடுத்தடுத்து தொகுதிகளாக உள்ளீர்க்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2019 இல் அறிவிக்கப்பட்ட ColorOS 7 உலகளவில் OPPO பயனர்களிடமிருந்து சாதகமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 'மிருதுவான மற்றும் மகிழ்ச்சியான' அமைப்புடன், அன்ட்ரொய்ட் 10 அடிப்படையிலான மொபைல் இயங்குதள முறைமையானது, புதிய எல்லையற்ற வடிவமைப்பு, வேகமான மற்றும் மிருதுவான செயல்திறன், மேம்பட்ட தனியுரிமை பாதுகாப்பு மற்றும் Soloop, focus mode, மேம்படுத்தப்பட்ட மூன்று விரல் screenshot போன்ற புதிய அம்சங்களுடன் வருகிறது.

வெளியீடு குறித்து OPPO லங்கா தலைமை நிர்வாக அதிகாரி பொப் லி தெரிவிக்கையில், "ColorOS குழுவானது, உச்ச தரத்தின் தேவைப்பாடு மற்றும் பயனர்களின் கருத்து ஆகியன தொடர்பில் அதிக கவனம் எடுத்துள்ளது. உத்தியோகபூர்வ பதிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு, உலகளவில் 92,000 இற்கும் மேற்பட்ட சோதனையாளர்களிடமிருந்து அதிலுள்ள பிழைகள் மற்றும் கருத்துகளை நாம் மதிப்பீடு செய்கிறோம். சோதனை பதிப்பிலிருந்து ஆயிரக்கணக்கான திருத்தங்களைச் மேற்கொள்கிறோம். "

ColorOS ஆனது 140 நாடுகளில் 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் 80 இற்கும் மேற்பட்ட மொழிகளுக்கு ஈடு கொடுக்கிறது. ColorOS 7 இன் வளர்ச்சி மற்றும் வெளியீட்டில் OPPO ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையங்கள் முக்கிய பங்கு வகித்தன. நிலையான உத்தியோகபூர்வ வெளியீட்டில் பயனர் கோரிய அம்சங்களை சேர்க்க ColorOS 7 சோதனை பதிப்பிலிருந்து மதிப்புமிக்க பயனர் கருத்துக்களை R&D குழு மதிப்பீடு செய்தது.

ColorOS 7 உத்தியோகபூர்வ பதிப்பு ஏற்கனவே OPPO Find X, Find X SuperVooc Edition, Find X Automobili Lamborghini Edition, Reno 10X Zoom, Reno, Reno 2, Reno 2F, R17 Pro, F11 Pro மற்றும் F11 இல் கிடைக்கிறது. ColorOS 7 புதுப்பிப்பின் உத்தியோகபூர்வ பதிப்பு மற்றும் OPPO ஸ்மார்ட்போன்களான F9, F9 Pro, F7, F7 128G, A5 2020, A9 2020 ஆகியவற்றுக்கு வெளியிடப்படுகிறது. இது ஜூன் 2020 இல் கட்டம் # 1 இன் கீழ் மேம்படுத்தப்படும். A91 கட்டம் # 2 இன் கீழ் ஜூலை 2020 இல் மேம்படுத்தப்படும்

ColorOS பற்றி
ColorOS என்பது மிகவும் விருப்பத்திற்கேற்ப தனிப்பயனாக்கப்பட்ட, திறமையான, சாதுர்யமான OPPO விலிருந்து அன்ட்ரொய்ட் அடிப்படையிலான மொபைல் இயங்குதளமாகும். 350 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களைக் கொண்ட, ColorOS ஆங்கிலம், ஸ்பானிஷ், ஹிந்தி, அரபு, தாய், தமிழ், உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட மொழிகளுக்கு இசைவானதாகும்.

OPPO பற்றி
முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, 2008 ஆம் ஆண்டில் அதன் முதல் ஸ்மார்ட்போன் - "ஸ்மைலி ஃபேஸ்" அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, OPPO அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தின் சரியான சினெர்ஜியை இடைவிடாமல் தொடர்கிறது. தற்போது, OPPO தனது Find மற்றும் Reno தொடர்கள் மூலம் பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது. சாதனங்களுக்கு அப்பால், OPPO அதன் பயனர்களுக்கு ColorOS மற்றும் HeyTap மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகளை வழங்குகிறது. OPPO 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இயங்குகிறது, உலகளவில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளதுடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையம் உள்ளது. ஹைதராபாத்தில், சீனாவுக்கு வெளியே சமீபத்தில் திறக்கப்பட்ட, முதன்முதல் R&D மையம், 5 ஜி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேக் இன் இந்தியாவுக்கான OPPO இன் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50 மில்லியனாக ஸ்மார்ட்போன்  உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

IDC இற்கு அமைய, OPPO இந்தியாவின் முதல் 5 ஸ்மார்ட்போன் நாமங்களில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 2019 ஆம் ஆண்டின் 4 ஆவது காலாண்டு வளர்ச்சியில் ஆண்டுக்கு  88.4% வளர்ச்சியை கொண்டுள்ளது.

தற்போது, ​​OPPO 10,000 இற்கும் மேற்பட்ட R&D ஊழியர்கள், நான்கு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் உலகம் முழுவதும் ஆறு ஆராய்ச்சி நிறுவனங்களையும் கொண்டுள்ளது. 5G, செயற்கை நுண்ணறிவு, AR, பெரும் தரவு மற்றும் ஏனைய துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும், வன்பொருள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் பொறியியல் திறனை உருவாக்குவதற்கும் மூன்று ஆண்டுகளில் 50 பில்லியன் யுவான்களை  ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) இல் முதலீடு செய்யவுள்ளது என, OPPO நிறுவுனர் மற்றும் பிரதான நிறைவுற்று அதிகாரி டோனி சென் சுட்டிக்காட்டியுள்ளார். OPPO இன் தொடர்ச்சியான R&D முயற்சிகள் மற்றும் தொழில் கூட்டாளர்களுடன் பரந்த ஒத்துழைப்புடன், எதிர்காலத்தை உலகெங்கிலும் உள்ள அதன் பயனர்களுக்கு யதார்த்தமாக நெருக்கமாக்கியுள்ளது.


Add new comment

Or log in with...