வலையில் சிக்கிய மேலும் இரு சிறுத்தைகள்; ஒன்று பலி | தினகரன்

வலையில் சிக்கிய மேலும் இரு சிறுத்தைகள்; ஒன்று பலி

புசல்லாவை, ஹெல்பொட தோட்டப் பகுதியில், இன்றையதினம் (23) இரண்டு சிறுத்தைகள் வலையில் சிக்கியுள்ளன.

அவற்றில் ஒன்று, சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.  

இதில் காயமடைந்துள்ள மற்றைய சிறுத்தையை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஓரிரு மாதங்களாக, மிக அரிதான கரும் சிறுத்தை உட்பட பல சிறுத்தைகள் வலைகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும், காயமடைந்த சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.


Add new comment

Or log in with...