கடற்படையைச் சேர்ந்த ஒருவர் குணமடைவு

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படையைச் சேர்ந்த மேலும் ஒருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர், PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று (22) வைத்தியசாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 786ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு குணமடைந்தவர்கள், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, கடற்படையினரால் மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


Add new comment

Or log in with...