லொறியில் மறைத்து 20 கி.கி. கஞ்சா கடத்தல்

வவுனியாவில் 20 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கைது நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள், லொறியொன்றை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.

குறித்த லொறியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மன்னம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கிளிநொச்சியிலிருந்து தம்புள்ளை வரை பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிச் சாரதி எனவும் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபரை இன்றைய தினம் (19) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த, பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...