இந்தியாவிலிருந்து 53 பேர் நாடு திரும்பினர் | தினகரன்

இந்தியாவிலிருந்து 53 பேர் நாடு திரும்பினர்

தங்களது நாட்டிற்கு திரும்ப முடியாமல், இந்தியாவின் தமிழ்நாட்டில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 53 பேர் இன்று (17) அதிகாலை, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இக்குழுவினர், இந்தியாவின் சென்னையிலிருந்து இன்று காலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதோடு, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1026 எனும் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தோரில் 02 சிறுவர்கள் அடங்குகின்றனர். அவர்கள் விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கொரோனா வைரஸ் தொற்று நோயை கண்டறிவதற்காக PCR பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

இப்பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்களுக்கு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.   


Add new comment

Or log in with...