சொய்சாபுர உணவக சம்பவம்; துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சாபுர பிரதேசத்தில் உணவகம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ரி 56 வகை துப்பாக்கி, 02 மெகசீன்கள் மற்றும் 35 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், நேற்று (11) பிற்பகல் மாலபே நகரில் மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கலேவெல, பெலியகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பிலியந்தலையில் தற்காலிகமாக வசித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...