திருமண வீட்டில் உணவு நஞ்சாகி 30 பேர் வைத்தியசாலையில்

திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் மட்டக்களப்பு, ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக, ஆரையம்பதி சுகாதார வைத்தியதிகாரி, வைத்தியர் எம். ரமேஸ் தெரிவித்தார்.

நேற்றிரவு (02) ஆரையம்பதி கோயில்குளம் பகுதியில் திருமண வீடொன்றில் சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி கலந்த புரியாணியை உட்கொண்டுள்ளனர். இதன் பின்னர் இவர்களில் அதிகமானோர் மயக்கம், வாந்தி, காய்ச்சல் காரணமாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுள் பெண்களும், சிறுவர்களும் அடங்குகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சுகாதார பகுதியினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று (03) காலையும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பாகவும், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல்.ஜவ்பர்கான்)


Add new comment

Or log in with...