கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் தீ; மூன்று வீடுகள் முற்றாக சேதம் | தினகரன்

கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் தீ; மூன்று வீடுகள் முற்றாக சேதம்

கொத்மலை  வேவண்டன் தோட்டத்தில்  ஏற்பட்ட  திடீர் தீ விபத்து காரணமாக மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 09 பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேவண்டன் தனியார் தோட்ட தேயிலை தொழிற்சாலை பிரிவிலுள்ள லயன் குடியிருப்பே நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தீ விபத்துக்குள்ளானதுடன் அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மின்சார ஒழுக்கே தீ விபத்துக்கான காரணம் என  கொத்மலை பொலிஸார் தெரிவித்ததுடன் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடியிருப்புகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தீ வித்தில் பாதிக்கப்பட்ட  குடியிருப்புகளின் அத்தியாவசிய  உபரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது உயிராபத்துக்கள் ஏதும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உலருணவு பொருட்களை கொத்மலை  பிரதேச செயலகத்தினூடாக  வழங்கியுள்ளதுடன் ட்ரட்ஸ் நிறுவனத்தினூடாக கூரைத்தகடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர் 


Add new comment

Or log in with...