லொறி வீதியை விட்டு விலகி விபத்து; சாரதி பலி | தினகரன்

லொறி வீதியை விட்டு விலகி விபத்து; சாரதி பலி

லொறி வீதியை விட்டு விலகி விபத்து; சாரதி பலி-Lorry Accident Driver Dead-Wilgam Temple-Trincomalee

திருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதி, வில்கம் விகாரை பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி வீதியை விட்டு விலகி விபத்து; சாரதி பலி-Lorry Accident Driver Dead-Wilgam Temple-Trincomalee

இவ்விபத்து இன்று (03) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி, அநுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி சீமெந்து ஏற்றுவதற்காக பயணித்துக்கொண்டிருந்த போது, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

லொறி வீதியை விட்டு விலகி விபத்து; சாரதி பலி-Lorry Accident Driver Dead-Wilgam Temple-Trincomalee

இவ்வாறு உயிரிழந்தவர், 33வயதான கண்டி-கலகெதர பகுதியைச் சேர்ந்த சன்ஜய சந்துன் விக்ரமசிங்க எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லொறி வீதியை விட்டு விலகி விபத்து; சாரதி பலி-Lorry Accident Driver Dead-Wilgam Temple-Trincomalee

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Add new comment

Or log in with...