மின்சார வேலியில் சிக்கி விவசாயி பலி

மின்சார வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் இன்று (02)  உயிரிழந்துள்ளதாக,  வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி, திக்கோடை சுரவணையடி ஊற்றைச் சேர்ந்த சீனித்தம்பி சந்திரசேகரம் (50) எனும் விவசாயியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வழமை போன்று தனது மாட்டுப்பட்டியடிக்கு இன்று அதிகாலை சென்றுள்ளார். அங்கு காட்டு யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்கு விவசாயிகளால் நிறுவப்பட்டிருந்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் வேலியைக் கடக்க முற்பட்டபோது, அவர் மின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஆலையடிவேம்பு  சுழற்சி நிருபர் - என். ஹரன், பெரியபோரதீவு தினகரன் நிருபர் – வடிவேல்  சக்திவேல்)  


Add new comment

Or log in with...