தனிமைப்படுத்தலில் 5038 படைவீரர்கள்

முப்படையினராலும் பராமரிக்கப்பட்டு வரும்  44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5038 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்தது. 

அத்துடன் இதுவரை 11 ஆயிரத்து 558 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பின்னர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக அந்த மையம் தெரிவித்தது. 

முப்படைகளால் பராமரிக்கப்பட்டு வரும் கண்ணோறுவ, கண்ணோறுவ  விவசாய விடுமுறை விடுதி, குண்டசாலை தேசிய கட்டிடம், பள்ளேகலை கூட்டுறவு கட்டிடம், ப்ளூ வோட்டர் ஆகிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 70 பேர் நேற்றைய தினம் பிசிஆர் பரிசோதனைக்குப்பின்னர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அந்த மையம் தெரிவித்தது.

கடந்த 24 மணித்தியாலங்களில் கடற்படையினர் நான்கு பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் ஒரு படை வீரர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளார்.

அதற்கிணங்க இதுவரை 754 படைவீரர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் 411 பேர் இதுவரை பூரண சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன் மேலும் 343 பேர் பல்வேறு வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அந்த மையம் மேலும் தெரிவித்தது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  


Add new comment

Or log in with...