இ. ஆ. அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய பணமூட்டையொன்றை கொடுத்ததாக கூறும்படி வற்புறுத்தினர்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி

 

காலி கடலில் நிறுத்தப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பாக விசாரணை நடத்திய இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு சாக்கு நிறைய பணம் கொடுத்ததாக கூறும்படி வற்புறுத்தியதாக அவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி நேற்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கூறினார்.

மேலிடத்தில் இருந்து கிடைக்கும் ஆலோசனைக்கமைய இந்த சாட்சியத்தை பெறுவதாக அச்சந்தர்ப்பத்தில் அவ்வதிகாரிகள் தம்மிடம் சாட்சியத்தை வற்புறுத்தி பெற்றார்கள் என ஆணைக்குழுவின் முன்னிலையில் கூறிய அவர்,

இலஞ்ச மற்றும் மோசடி ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் தில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்க தொலைபேசி அழைப்பினை பெற்றுக்ெகாடுத்து வழக்கு தாக்கல் தொடர்பாக மன்னிப்பு கேட்டார் எனவும் அத்தொலைபேசி அழைப்பு தொடர்பான பதிவு செய்யப்பட்ட உரையாடலை ஆணைக்குழு முன்னிலையில் காட்சிப்படுத்தி கூறினார்.  

நிஸ்ஸங்க சேனாதிபதி இதனை 2015ம் ஜனவரி மாதம் 08ம் திகதி ஆரம்பமாகி 2019 ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி முடிவடையும் காலப்பகுதியில் பதவி வகித்த ஊழியர்கள் மற்றும் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களுக்கு ஏற்பட்டதாக கூறும் பழிவாங்கல் தொடர்பாக, விசாரணை நடத்தி தகவல்கள் பெறும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழு முன் தெரிவித்தார்.  

அவ்ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன நடவடிக்ைககளை மேற்கொள்கின்றார். ஏனைய அங்கத்தவர்களாக முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரா ஜயதிலக்க, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாந்து ஆகியோரின் தலைமையில் ஆணைக்குழுவின் நடவடிக்ைககள் ஆரம்பிக்கப்பட்டன. அங்கு நிஸ்ஸங்க சேனாதிபதி தானும் தில்ருக்ஷி டயசும் மேற் கொண்ட தொலைபேசி கலந்துரையாடல் தொடர்பான நாடாவை ஆணைக்குழு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இயக்கி சாட்சியம் வழங்கினார்.   அதில் அவர்களின் உரையாடல் பதிவு செய்யப்பட்டிருந்ததில் தில்ருக்‌ஷி மன்னிப்பு கேட்கும் உரையாடலும் காணப்பட்டது.  

செங்கடலில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் நிறுத்தி வைத்திருக்கும் வேலையில் அவசர திருத்த வேலைகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் கூட பாதுகாப்பு அமைச்சால் வேறு கப்பல்களுக்கு மாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்த சட்டமா அதிபரான யுவஞ்சன் விஜேதிலக்க விசாரணை மேற்கொள்ளும் வேலையில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். மீண்டும் வழக்கு தாக்கல் செய்வதாக இருந்தால் சட்டமா அதிபரின் அனுமதி இன்றி மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தார். அவ்வாறான வேலையில் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது முற்று முழுதாக அரசியல் பழிவாங்கலாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க அனுமதி பெற்று அவரை சந்தித்தேன். அச்சந்தர்ப்பத்தில அவரும் இந்நடவடிக்ைக மூலம் பெறுமளவு அந்நிய செலாவனி நாட்டிற்கு கிடைக்கும் என்று தெரிவித்தார். அந்த கடிதக் கோப்புகளை விசாரணை செய்வதற்கு குழுவொன்றை நியமிப்பதாக கூறினார்.  

முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்‌ஷவை சிக்க வைக்கும் தேவை நிமித்தமே தன்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சேனாதிபதி ஆணைக்குழு முன் தெரிவித்தார். 


Add new comment

Or log in with...