700 இந்தியர்களுடன் இந்திய கடற்படையின் 'ஜலஷ்வா' இலங்கையிலிருந்து பயணம்

இலங்கையில் தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்” நடவடிக்கையின் கீழ் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 

இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்துகொண்ட சுமார் 700 பேர் நேற்றைய தினமே இக்கப்பலில் அழைத்து செல்லப்பட்டனர். 

கோவிட் 19 பரவலுடன் நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டது. இதனால் இலங்கை வந்திருந்த இந்தியர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் உலக நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தமது நாட்டுக்கு அழைத்து கொள்ளும் நடவடிக்கையை வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் இந்திய அரசு ஆரம்பித்தது.  இதன் ஒரு கட்டமாகவே இந்திய கடற்படையின் ஜலஷ்வா இலங்கைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு உட்பட 700 இந்தியர்களும் இந்திய ஜலஷ்வா கடற்படைக் கப்பலில் நேற்று மாலையே புறப்பட்டுச் சென்றனர்.   

கே. அசோக்குமார் 


Add new comment

Or log in with...