கார் - மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி

கார் - மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி-Car-Motor Cycle Accident-52-Yr Old Dead-42-Yr Old Injured-Driver Arrested

ஒருவர் படுகாயம்; காரின் சாரதி கைது

திருகோணமலை, கந்தளாய் - சேருவில பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (01)  மாலை இடம்பெற்றுள்ளது.

கார் - மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி-Car-Motor Cycle Accident-52-Yr Old Dead-42-Yr Old Injured-Driver Arrested

சேருவில பிரதேசத்திலிருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கந்தளாயிலிருந்து சென்று கொண்டிருந்த காருடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் சென்ற 42 வயதுடையவர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் - மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி-Car-Motor Cycle Accident-52-Yr Old Dead-42-Yr Old Injured-Driver Arrested

விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் கந்தளாய் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Add new comment

Or log in with...