நாடு திரும்பும் 700 இந்திய பிரஜைகள் | தினகரன்


நாடு திரும்பும் 700 இந்திய பிரஜைகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள் 700 பேர், இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இன்று (01) புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

இந்திய பிரஜைகள் 1,500 பேரிற்கும் அதிகளவானோர், தங்களது நாட்டிற்கு திரும்ப முடியாமல், இலங்கையில் சிக்கியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 176 பேர் கொண்ட முதல் தொகுதியினர், இந்திய விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தனர்.   

இரண்டாவது தொகுதியினரான இந்திய பிரஜைகள் 700 பேரிற்கும் அதிகளவானோரை அழைத்துக் கொண்டு செல்வதற்காக, நேற்று (31) பிற்பகல்   இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று கொழும்பிற்கு வருகை தந்துள்ளது. 


Add new comment

Or log in with...