யட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை

யட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை-Another Leopard Trapped at Seepoth-Yatiyanthota

6 மணி நேர போராட்டத்தின் பின்னர் மீட்பு

யட்டியாந்தோட்டை, சீபொத் பகுதியில் பொறியொன்றில் சிக்கிய நிலையில் மற்றுமொரு சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிக்கிய 5 வயதான ஆண் சிறுத்தை, வனஜீவராசிகள் அதிகாரிகளால் மயக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வீடொன்றின் பின்பகுதியில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய சிறுத்தையை சுமார் 6 மணி நேர முயற்சியின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.

யட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை-Another Leopard Trapped at Seepoth-Yatiyanthota

கடந்த செவ்வாய்க்கிழமை (26) நல்லதண்ணி, லக்ஷபான தோட்டம், வாழமலை பகுதியில் கம்பி வலை பொறியில் சிக்கிய அரிய வகை (Panthera pardus kotiya) கருஞ் சிறுத்தையொன்று சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றையதினம் (29) உயிரிழந்திருந்தது.

யட்டியாந்தோட்டையில் பொறியில் சிக்கிய மற்றொரு சிறுத்தை-Another Leopard Trapped at Seepoth-Yatiyanthota

இவ்வாறு பொறிகளில் சிக்கும் இவ்வரிய வகை சிறுத்தைகள் காயமடைந்து இறப்பது தொடர்பில் வருத்தமளிப்பதாக, சூழலியல் பாதுகாப்பு குழுவான 'Leopocon - Sri Lanka' தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Add new comment

Or log in with...