வெலிகமவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்

- சந்தேகநபர்களில் ஒருவர் மடக்கிப்பிடிப்பு

வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக வந்த சந்தேகநபர்கள் இருவரில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சந்தேகநபர்  பிரதேசவாசிகளினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. 

அத்தோடு, இத்துப்பாக்கிச் சூட்டை நடத்திய பிரதான சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 


Add new comment

Or log in with...