மே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு | தினகரன்

மே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு

மே 31, ஜூன் 04, 05 இல் நாடு முழுவதும் ஊரடங்கு-Islandwide Curfew On May 31-June 04-05

ஏனைய நாட்களில் வழமை போன்று இரவில் ஊரடங்கு

எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 04, 05 ஆகிய தினங்களில் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, மே 31 ஞாயிற்றுக்கிழமை, ஜுன் 04 வியாழன் மற்றும் பொசொன் பௌர்ணமி தினமான ஜுன் 05 வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஏனைய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...