கொவிட் -19 நோயாளர்களை ஏற்றிய 4 அம்பியூலன்ஸ் வண்டிகள் விபத்து | தினகரன்

கொவிட் -19 நோயாளர்களை ஏற்றிய 4 அம்பியூலன்ஸ் வண்டிகள் விபத்து

கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த 04 அம்பியூலன்ஸ் வண்டிகள் இன்று (26) மாலை ஹோமாகம, கந்தலந்த பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளன.

மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, ஹோமாகம வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்தபோதே, இவ்விபத்து நேர்ந்துள்ளது.

குவைத்திலிருந்து திரும்பிய பின்னர்,  பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கொவிட் -19 நோயாளர்கள்   24 பேரை ஏற்றிய  07 அம்பியூலன்ஸ் வண்டிகள் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்தன. இதன்போதே 04 அம்பியூலன்ஸ் வண்டிகள் விபத்திற்குள்ளாகின.

எனினும், இவ்விபத்தின்போது நோயாளர்கள் எவரும் காயமடையவில்லை என்பதோடு, பொலிஸாரின் உதவியோடு அவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...