நல்லதண்ணி, லக்‌ஷபானவில் அரிய வகை கரும்புலி

நல்லதண்ணி, லக்‌ஷபானவில் அரிய வகை கரும்புலி-A Rare Black Panther Spotted in An Estate in Nallathanniya-Laxapana

பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் மீட்பு

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் இன்று (26) காலை வேளையில் அரிய வகை கரும் புலியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் இக்கரும்புலி பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி, லக்‌ஷபானவில் கரும்புலி-A Rare Black Panther Spotted in An Estate in Nallathanniya-Laxapana

மேலும், இச்சம்பவ இடத்திற்கு நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனாண்டோ, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்திக் கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தனர்.

நல்லதண்ணி, லக்‌ஷபானவில் கரும்புலி-A Rare Black Panther Spotted in An Estate in Nallathanniya-Laxapana

அத்துடன் வனத்துறை அதிகாரி கூறுகையில், இப்புலியானது உயிருடன் இருப்பதால் மிருக வைத்திய அதிகாரி வருகை தரும் வரை அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.

நல்லதண்ணி, லக்‌ஷபானவில் கரும்புலி-A Rare Black Panther Spotted in An Estate in Nallathanniya-Laxapana

(மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர் - செ.தி. பெருமாள்)

Add new comment

Or log in with...