வவுணதீவு கண்ணகிபுரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது | தினகரன்

வவுணதீவு கண்ணகிபுரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுணதீவு கண்ணகிபுரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது-Suspect Arrested With Locally Made Gun at Vavunathivu

மட்டக்களப்பு - வவுணதீவு, கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (24) இரவு தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த சந்தேகநபரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன் துப்பாக்கியொன்றையும் மீட்டுள்ளனரென வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபரை, அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படப்பட்டுள்ளதாக, வவுணதீவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)


Add new comment

Or log in with...