மார்ச், ஏப்ரல் மின்சார பட்டியலை தனித்தனியாக வழங்கவும்

மின்சார பாவனையாளர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சாரக் கட்டண பட்டியலை வெவ்வேறாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி, வலுசக்தி மற்றும் போக்குவரத்து முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர பணித்துள்ளார்.

அத்தோடு, மின்சார பாவனையாளர்கள்,   அப்பட்டியல்களுக்கு கட்டணம் செலுத்த சலுகைக் காலத்தை வழங்குமாறும், அமைச்சர் பணித்துள்ளார்.

அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற  கூட்டத்தின்போது, இலங்கை மின்சார சபைக்கும் இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்திற்கும் அவர் இவ்வாறு பணித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த இரண்டு மாதங்களுக்குமான மின்சார பட்டியல்களுக்கான கட்டணத்தை செலுத்த மின்சார பாவனையாளர்களுக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

பல இடங்களில் இலங்கை மின்சார சபை, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு, ஒரே மின்சார பட்டியலை பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஆகையால், இதனை உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை மின்சார சபைக்கும், இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்திற்கும், அமைச்சர் பணித்துள்ளார். 


Add new comment

Or log in with...