இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஜூன் 11 வரை நீடிப்பு

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஜூன் 11 வரை நீடிப்பு-All-types-of-VISA-for-foreigners-Currently-in-SL-Extended-Till-June-11

வீசாவை புறக்குறிப்பு இட இணையத்தின் ஊடாக முற்பதிவு செய்து நேரத்தை ஒதுக்கி வரவும்

கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து வீசா விண்ணப்பதாரிகளும் ஜூன் 11ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்தில் முற்பதிவு செய்து நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய வீசா கட்டணத்தை செலுத்துவதன் மூலம் தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 07ஆம் திகதிக்கும் ஜூன் 11ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காலவதியாகும் எல்லா வீசாக்களுக்கும் தண்டப்பணம் அறிவிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுவதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:
குறுகிய கால வீசா (Visit Visa)

வதிவிட வீசா (Residence Visa)

மேலதிக விசாரணைகளுக்கு: 0707101058
(மு.ப. 9.00 - பி.ப. 4.00 மணிக்கு இடையில் தொடர்பு கொள்ளவும்)

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு...


Add new comment

Or log in with...