மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பரவக் காரணம் ஈரான் விமானம்!

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவ முக்கிய காரணமாக இருந்தது  ஈரான் நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனம் தான் என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான காரணம் குறித்த தேடலில்  லெபனான்  ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான முதல் நபர்கள்  ஈரானின் 'மஹான் ஏர்' எனும் விமான நிறுவனத்தின் விமானங்களில்  பயணம் மேற்கொண்டவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று மற்ற நாடுகளில் பரவத் துவங்கியதும்  ஈரான் அரசு  வெளி நாடுகளுக்கு விமானங்களை இயக்கத் தடை விதித்தது. அந்த தடையை மீறி 'மஹான் ஏர்' நிறுவனம் தொடர்ந்து சீனாவுக்கு விமானங்களை இயக்கியது  தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

'மஹான் ஏர்' விமான நிறுவன ஊழியர்கள் கூறுகையில்  'கொரோனா வைரஸ் பரவலைக் கையாளும் விதம் மற்றும் பாதுகாப்புக் கவசங்கள் பற்றாக்குறை ஆகியவற்றைக் குறித்து  அனைத்து ஊழியர்களும் எங்கள் நிறுவனத்திடம் கவலை தெரிவித்தார். ஆனால் அதை எங்கள் நிறுவனம் அலட்சியப்படுத்தியதுடன்  இதுகுறித்து வெளியில் கூற வேண்டாம் எனவும் உத்தரவிட்டது' என்றனர். இதையடுத்து  மஹான் ஏர் நிறுவனத்திடம் ஈரான் அரசு விசாரணையைத் துவக்கியுள்ளது.


Add new comment

Or log in with...