யாழில் கடலுக்குள் பாய்ந்து பஸ் விபத்து

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் வண்டி,  கடலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதில் பஸ் நடத்துனர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று (30) பிற்பகல் 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் - யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

(நிதர்சன் விநோத்)


Add new comment

Or log in with...