புதுடில்லியில் சிக்கிய மாணவர்களை அழைத்துவர விசேட விமானம்

இலங்கைக்கு வர முடியாமல், இந்தியாவின் புதுடில்லியில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 143 பேரை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கா எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானமொன்று இன்று (29)  காலை இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1195 எனும் விமானம், இன்று காலை 9.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடில்லி நோக்கி புறப்பட்டுள்ளது.

இவ்விமானத்தில் விமான சேவை பணியாளர்கள் 08 பேர் பயணித்துள்ளனர்.

இவ்விமானம் இன்று நண்பகல் 12.35 மணியளவில் புதுடில்லி விமான நிலையத்தை சென்றடையுமென்பதோடு, அங்கிருந்து மாலை 5.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திரும்பவும் வந்தடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Add new comment

Or log in with...