விபத்து; பணிக்கு திரும்பிய 5 கடற்படை வீரர்கள் காயம்

கடற்படை வீரர்கள் பயணித்த இ.போ.ச. பஸ் வண்டியொன்று  விபத்திற்குள்ளானதில், 05 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

காலி – கொழும்பு பிரதான வீதியில், அம்பலாங்கொடை, ரந்தம்பை பிரதேசத்தில் இன்று (28) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வண்டியானது, வீதியிலிருந்து விலகிச் சென்று மதிலொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விடுமுறைக்குச் சென்ற பத்தேகம, காலி, கொக்கல பகுதிகளைச் சேர்ந்த 32 கடற்படை வீரர்கள் கொழும்பு நோக்கி புறப்பட்ட வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதி உறக்க கலக்கத்தில் இருந்ததால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த கடற்படை வீரர்கள், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...